சுவாமி விவேகானந்தரின் ஜனன தினமான நேற்று(12.01.2016) சர்வதேச இளைஞர் தினமாகும். இத் தினத்தை முன்னிட்டு தமிழ் விருட்சம் அமைப்பு நோர்வே வாழ் துரைசிங்கம் விஜேந்திரன் அவர்களின் நிதி பங்களிப்புடன் வறுமைகோட்டிற்கு உட்பட்ட 10 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் வைத்து விஜேந்திரனின் தாயார் திருமதி துரைசிங்கம் பாக்கியமலர் மூலம் வழங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் திருமதி து.பாக்கியமலர், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ப.சத்தியசீலன், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா.சேனாதிராசா, ஹட்டன் நேஷனல் வங்கி முகாமையாளர், உத்தியோகஸ்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.






