வவுனியாவில் இ.போ.சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சபை உத்தியோகத்தர்களுடன் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் பேச்சுவார்த்தை!!

547

CTB

நேற்று காலை வவுனியா பிரதி பொலிஸ்மா அத்தியட்சகர் காரிலாயத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. இ.எம்.எம்.ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் வவுனியா போக்குவரத்துப் பொலிசார், மற்றும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் இ.போ.ச. சாலை முகாமையாளர்கள், பிரதேச செயலாளர்கள், என பலரும் கலந்து கொண்டதாக தனியார் போக்குவரத்து பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் திரு.வ.இராஜேந்திரன் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தை தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்..

கடந்த காலங்களில் இ.போ.ச சாலை பேரூந்துகளுக்கு கல் வீசுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் இச்செயற்பாடு நடந்துகொள்ளவண்ணம் செயற்படுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டதாகவும் தற்காலிகமாக பிரயாணிகளின் நன்மையினை கருத்திற்கொண்டு வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக 30 நிமிடத்திற்கு ஒரு வவுனியா யாழ்ப்பாணத்திற்கான தனியார் பேரூந்தினை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கு முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு இதில் தரித்து நின்று பயணிகளை எற்றிச் செல்வதற்கு முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் இன்று (14.01.2016) முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

நேர அட்டவணைகள் அதிகாரிகள் தராத பட்சத்தில் பயணிகளை எற்றுவதில் சில குறைபாடுகள் இருந்ததைக் கருத்திற்கொண்டு தனியார் போக்குவரத்து உரிமையாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பிரதி பொலிஸ்மா அதிபர் தற்காலிகமாக இந்த இடத்தினை பெற்றுத்தந்துள்ளதாகவும் இதற்கு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கமும், வர்த்தகர்களும் ஒத்துழைப்பினை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.