சூரியனுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையான தைத்திருநாளை இன்றைய தினம் உலக வாழ் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.
தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற ஆன்றோர் வாக்கிற்கு அமைய பிறந்துள்ள வருடம் முழுவதும் தங்கள் வாழ்வு செழிக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு, தை மாதத்தின் முதல் நாளை தமிழ் மக்கள் வரவேற்கின்றார்கள்.
உழவர்களின் தனித்துவத்தையும், அவர்களின் நன்றியுணர்வையும் உலகுக்கு உணர்த்துவதாக தைப்பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.
இந்தவகையில் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திலும் தைபொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை எஸ்.சத்தியராஜ் அவர்களால் விசேட ஆராதனையுடன் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.






