வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டி!!

620

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு இந்துக்கல்லூரியின் அதிபர் திருமதி.ஜி.நடராசா தலமையில் இன்று (16.01.2016) காலை 7 மணிக்கு மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது.

இம் மரதன் ஓட்டத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆண்களுக்கான மரதன் ஓட்டம் கோவில்குளம் இந்துக் கல்லூரியில் ஆரம்பமாகி குருமன்காட்டை சென்றடைந்து அங்கிருந்து வவுனியா பசார் வீதி வழியாக மீண்டும் இந்துக்கல்லூரியை வந்தடைந்தது.

பெண்களுக்கான மரதன் ஓட்டமானது கண்டி வீதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு வலயக் கல்விப் பனிமனைக்கு முன்பாக ஆரம்பித்து பசார் வீதி வழியாக வவுனியா இந்துக் கல்லாரியை வந்தடைந்தது.

இந்துக் கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியில் முதலாம் இடத்தை வவுனியா இந்துக்கல்லூரியைச் சேர்ந்த செ.கஜரூபன், இரண்டாம் இடத்தை பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த சோ.அஜித்குமார், மூன்றாம் இடத்தை வவுனியா இந்துக்கல்லூரியைச் சேர்ந்த ந.முகேஸ் பெற்றுக்கொண்டனர்.

பெண்களுக்கான மரதன் ஓட்டத்தில் முதலாம் இடத்தை வவுனியா வீரபுரம் மாணிவாசகர் வித்தியாலயத்தை சேர்ந்த ஐ.மேரிகொண்சலா பெற்றுக்கொண்டார், இரண்டாம் இடத்தை வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த சி.கேமப்பிரியா பெற்றுக்கொண்டார். மூன்றாம் இடத்தை வவுனியா வீரபுரம் மாணிவாசகர் வித்தியாலயத்தை சேர்ந்த ஐ.கனிஸ்ரலா பெற்றுக்கொண்டார்.

IMG_7566 IMG_7608 IMG_7611 IMG_7615 IMG_7622