வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கோமா நிலையில்!!

565

Accident

வவுனியா நெடுங்கேணி நயினாமடு பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிலில் சென்றபோது குறுக்கே பாய்ந்த காட்டுப்பன்றியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிலில் சென்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்து கோமா நிலையில் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடராசா சிவகுமார் (32 வயது) என்பவரே தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருக்கையிலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

சகோதரி சிறு காயங்களுடன் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.