வவுனியா செட்டிகுளம் வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு.நித்தியானந்தன் தலைமையில் நேற்று முன்தினம் (29.01.2016) நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, எம்.பி.நடராஜ், செட்டிகுளம் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.செல்வநாயகம், பெரியபுளியங்குளம் கிராம சேவையாளர் திரு.இளஞ்செழியன், வெங்கலச்செட்டிகுளம் கல்வி அபிவிருத்திக்குழுவின் நம்பிக்கை நிதியத்தின் பொருளாளர் இருதயராஜன் பாபு, அரசடிகுளம் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் தவலிங்கம் ரகு, அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், கிராம அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா அவர்களின் மாகாணசபை பிரமாண அடிப்படையிலான நிதியொதுக்கீடு ஊடாக, பாண்ட் வாத்தியக்குழுவுக்கான இசைக்கருவிகள் மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு.நித்தியானந்தனிடம் கையளிக்கப்பட்டன.






