வவுனியா தமிழ் மாமன்றத்தின் 2016ம் ஆண்டிற்கான விவாதப் பயிலரங்குகள் ஆரம்பம்!!

563

 
தமிழ் மாமன்றம் விவாதத் திறமையை வளர்த்தெடுக்கும் நோக்குடன் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தி வரும் விவாதப் பயிலரங்கு எனும் செயற்றிட்டத்தின், 2016ம் ஆண்டிற்கான முதலாவது விவாதப் பயிலரங்கு கடந்த சனிக்கிழமை (30.01.2016) அன்று காலை 9.00 மணியளவில் வவுனியா இந்துக் கல்லூரியில் சிறப்புற ஆரம்பமாகியது.

இப் பயிலரங்கில் கோமரசங்குளம் மகாவித்தியாலயம் மற்றும் வவுனியா இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த விவாத ரீதியில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய பயிலரங்கில், தமிழ் மாமன்றம் தொடர்பான அறிமுகத்தினைத் தொடர்ந்து விவாத ரீதியில் மாணவர்களை தயார்படுத்துவதற்கான செயற்றிடட்டங்கள் மேற்க்கொள்ளப்பட்டன.

மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் விவாதத்துறை சார்ந்தவர்கள் மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, பேச்சு, விவாதம் என்பபை எவ்வாறு செய்யபட்ட வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டு, மாணவர்களின் சந்தேகங்கள் கேட்டு தெளிவுபடுத்தப்டடது.

அதனைத் தொடந்து மாணவர்களின் பேச்சுத் திறமையை மதிப்பீடு செய்யும் முகமாக ஒரு நிமிட பேச்சுக்கான தலைப்புக்கள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் பேச்சாற்றல் மதிப்பீடு செய்யப்பட்டு, தமிழ் மாமன்ற உறுப்பினர்களால் மாணவர்களின் பேச்சிலுள்ள நிறை குறைகள் ஆராயப்பட்டு விளக்கமளிக்கட்டது.

தொடர்து விவாதம் நோக்கி மாணவர்களை அழைத்து செல்லும் அடுத்த படிமுறையாக, மாணவர்களின் தர்க்கிக்கும் திறனை அதிகரிக்கும் முகமாக, மாணவர்களுக்கிடையே நேரடியாக தர்க்கங்கள் மேற்கொள்ளப்பட்து. ஒரு விவாதத்தில் எப்படி தர்க்கிப்பது? நேர்மையானமுறையில் ஒரு விவாதத்தை எப்படி மேற்கொள்வது? விவாதிகளின் கடமை என்ன? விவாதிகள் எப்படி எல்லாம் செயற்பட வேண்டும்? போன்ற விடயங்கள் அச் செயற்றிடத்தன் மூலம் தெளிவுபடுத்தபபட்டு பல்வேறு தலைப்புகளில் ஆரோக்கியமான ஓர் தர்க்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பயிலரங்கின் நிறைவாக, வருகை தந்த மாணவர்களில் ஒவ்வொரு குழுக்களிலிருந்து ஒவ்வொருவரையும், தமிழ் மாமன்ற உறுப்பினர்களையும் இணைத்து மாதிரி விவாதம் ஒன்று செய்யப்ட்டு, அதிலுள்ள குறை நிறைகள் ஆராயப்பட்டு விளக்கமளிக்கபட்டது.

தரமான விவாதிகளை உருவாக்கும் பொருட்டு, தமிழ் மாமன்றத்தால் மேற்கொள்ளப்படுகின்ற இச் செயற்றிட்டம், வவுனியாவின் வடக்கு, தெற்கு வலயங்களைச் சேர்ந்த ஏனைய படசாலைகளுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதோடு, வன்னியிலுள்ள ஏனைய மாவட்டங்களுக்கான விவாத ரீதியிலான பயிலரங்குகளை விரைவில் நடத்துவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருவதாக, பயிரங்கின் ஏற்பாட்டு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இச் செயற்றிட்டம் விவாதம் என்ற ரீதியல் மட்டுப்படுத்தபடாமல், விரைவில், சித்திரப் பயிலரங்கு, கவிதைப் பயிலரங்கு போன்ற ஏனைய துறை சார்ந்த பயிலரங்குகளும், அத்துறை சார் வளவாளர்களை வைத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் மாமன்றம் தெரிவித்தோடு, தமிழ் மாமன்றத்தின் செயற்றிடங்களில் இணைந்து செயற்பட ஆர்வமுள்ள ஆர்வலர்கள் அனைவரையும் தொடந்து நடைபெறும் செயற்றிடங்களில் பங்குபற்றுமாறு அழைப்பும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

11257960_1019273518136579_3748098299338863287_o 12615222_1019273504803247_4810212142965979679_o 12615250_1019273231469941_7247359222199368426_o 12622526_1019273424803255_6207310611232738162_o 12628527_1019273421469922_2198749986627617450_o 12640402_1019273264803271_9004866905591247862_o 12640432_1019273341469930_3873455891029501562_o 12640519_1019273308136600_4019984725986934846_o 12642633_1019273448136586_5234443377573836334_n 12646625_1019273521469912_4721283391994696694_o 12661794_1019273434803254_3221123631262746244_n