வவுனியா மாவட்ட விளையாட்டுத் துறை எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து அதனை விருத்தி செய்தல் தொடர்பில் இன்று(05.02.2016) விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் ஹாதீப் முகமட் ஹரிஸ் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
வவுனியாவுக்கு வருகை தந்த பிரதி அமைச்சர் வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இக் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதன்போது, விளையாட்டுக் கழங்களுக்கான உதவிகளை வழங்கல், வவுனியா மாவட்ட பாடசாலைகளில் உள்ள மைதானப் பிரச்சனைகள், உதைப்பந்தாட்ட வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், கிரிக்கெட் வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், வெளிநாட்டு விளையாட்டு நிகழ்வுகளுக்கு செல்லும் மாவட்ட மட்ட வீரர்களுக்கான உதவிகளை வழங்குதல், மாவட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் செயற்திட்டத்தை முன்னெடுத்தல் என பல விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சர் குருகுலராஜா, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ். திஸ்ஸநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோதாரராதலிங்கம், முத்தலிப் பாபா, பிரதேச செயலாளர் கா.உதயராசா, விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகங்கங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






