எம்பிலிப்பிட்டிய – வவுனியா பஸ்வண்டி, கலேவெல ஓமாரகொல்ல எனுமிடத்தில் விபத்துக்குள்ளானதில் பயணியொருவர் பலியானதுடன் மேலும் இருபது பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கலேவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ் வண்டி மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதிவிட்டு பாதையை விட்டு விலகியதால் பள்ளத்தில் விழுந்ததிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர் எனவும் மேலும் தெரியவருகிறது.






