வவுனியாவில் 13 வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்!!

673

Child-Rape

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் 13 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்துவந்த குறித்த 13 வயதுச் சிறுமியை வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வந்த 25 வயதுடைய இளைஞர் காதலிப்பதாக கூறிவந்துள்ளார்.

நேற்று முன்தினம் சிறுமியை இளைஞனின் உறவினரின் வீட்டிற்கு அழைத்து, சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுமியின் பெற்றோர் சிறுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டனர்.

முறைப்பாட்டினை பதிவு செய்த பொலிசார் குறித்த இளைஞனை உடனடியாக கைது செய்ததுடன் சிறுமியை துஸ்பிரயோகம் மேற்கொள்ள உடந்தையாக செயற்பட்டு இடம் கொடுத்த இளைஞனின் உறவினைரையும் கைது செய்து நேற்று வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது குறித்த இளைஞரை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.