
வேறு பெண்ணுடன் ஊர் சுத்திய கணவரை ரயில் நிலையத்தில் வைத்து மனைவி அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அப்பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக மனைவிக்கு தெரியாமல் ரமேஷ் வேறு பெண்ணுடன் சுற்றுவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று வேலை வேலை விஷயமாக அம்பத்தூர் வரை செல்வதாக கூறியபடி அவர் சென்றுள்ளார்.சந்தேகமடைந்த அமுதா கணவருக்கு தெரியாமல் பின் தொடர்ந்துள்ளார். அப்போது சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு போன் செய்து வர செய்து அவளுடன் கைக்கோர்த்தபடி எங்கோ செல்ல முயன்றுள்ளார்.
உடனடியாக அமுதா கணவர் மூன் போய் நின்றுள்ளார். மனைவியை பார்த்து ரமேஷ் அதிர்ச்சியடைந்துள்ளார்.பின்னர் மனைவியை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். எனினும் ஆத்திரமடைந்த அவரது மனைவி கணவர் மற்றும் அவரது தோழியை அடித்து உதைத்துள்ளார். இதனால் ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கிருந்த பொலிசார் ராமேஷ் மற்றும் அவரது தோழியை எச்சரித்து அனுப்பிவைத்தனர், இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





