வவுனியாவில் தமிழ் விருட்சத்தால் வயது முதிர்ந்த பெண்மணிக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பு!!

584

 
வவுனியா வைரவபுளியங்குளம் கிராமசேவகர் பிரிவின் நகரசபை விடுதியில் வசிக்கும் 79 வயதுடைய தர்மலிங்கம் ராசலெட்சுமி என்கிற வயது முதிர்ந்த அம்மா மூட்டு வாதத்தால் எழும்பி நடக்க முடியாமல் படுக்கையில் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது நிலையை அறிந்து கொண்ட மாவட்ட சமூக சேவை திணைக்களத்தின்

மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் அவர்களிடம் தெரியபடுத்தியை அடுத்து தமிழ் விருட்சம் அமைப்பால் சக்கர நாற்காலி 08.02.2016 அன்று வழங்கி வைக்கப் பட்டது .

இந்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாசன், அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.தவீசன், கி.வசந்தரூபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

DSCN0899 DSCN0902 DSCN0906 DSCN0909 DSCN0912