வவுனியாவில் வடமாகாணசபை உறுப்பினர் மீது தாக்குதல்!!

1165

Inthirarasa

இன்று இரவு 7.30 மணியளவில் வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஈ.பீ.ஆர்.எல்.ஏப் கட்சியைச் சேர்ந்த வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, M.P.நடராஜ் ஆகிய இருவரும் உக்குளாங்குளம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமி கரிஸ்னவிவின் மரண வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பும் வழியில் உக்குளாங்குளம் 4ம் ஒழுங்கைப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இருவர் இ.இந்திரராசா மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலை அடுத்து வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.