கடந்த 16ம் திகதி உக்குளாங்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட விபுலானந்தா கல்லூரி மாணவியின் படுகொலையைக் கண்டித்து இன்று(19.02.2016) காலை பாடசாலை ஆசிரியர்களினால் பாடசாலை முன்பாக கவயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலைக்கு முன்னால் ஒன்றுதிரண்ட பாடசாலை சமூகத்தினர் அனைவரும் கருப்புப்பட்டி அணிந்து மாணவியின் படுகொலைக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.






