இலங்கை – இந்திய மீனவர்கள் இடையே கொழும்பில் பேச்சுவார்த்தை..!

619

rameswaramகொழும்பில் ஒகஸ்ட் 7-ஆம் திகதி இந்திய, இலங்கை தூதரக அதிகாரிகள் முன்னிலையில் இலங்கை-தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து டில்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் கூறுகையில், “இரு நாட்டு மீனவர்கள் பிரச்னை முடிவுக்கு வர இச்சந்திப்பு நடைபெற வேண்டும் என எங்கள் அரசு விரும்புகிறது´ என்றனர்.

முன்னதாக, இக்கூட்டம் ஒகஸ்ட் 1-ஆம் திகதி நடப்பதாக இருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு கொழும்பு செல்ல தமிழக மீனவர்கள் விரும்பினர். ஆனால், முதல்வரைச் சந்திக்க நேரம் கிடைக்காததால் பயணத்தைத் தாற்காலிகமாக தவிர்த்ததாக தெரிகிறது.

தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க ஆலோசகர் தேவதாஸிடம் கேட்டபோது “முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இலங்கை பிரதிநிதிகளுடன் விரைவில் பேச்சு நடத்துவோம்´ என்றார்.