சீன வீதி நிர்மாண நிறுவனத்தில் தீ..!

618

fireஹம்பாந்தோட்டை – கட்டுவெவ சந்தியில் உள்ள சீனாவின் கெனிக் வீதி நிர்மாண நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று  இரவு 8.45 அளவில் இத்தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை பொலிஸார் மற்றும் நிறுவன ஊழியர்கள் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

தீ விபத்தால் ஊழியர்களின் விடுதிக்கும் அங்கிருந்த ஆவணங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. சேத விபரம் இன்னும் கணிக்கப்படவில்லை.

மின் ஒழுக்கு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

ஹம்பாந்தோட்