வவுனியாவில் கிராமசேவையாளர்கள் கவனயீர்ப்புப் பேரணி!!

822

 
இன்று (24.02.2016) வவுனியாவில் கிராமசேவையாளர்கள் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

நேற்று (23.02.2016) மாலை வவுனியா மகாறம்பைக்குளத்தில் உள்ள கிராமசேவையாளரின் அலுவலகம் மற்றும் கதவுகள், ஜன்னல்களும், தளபாடங்களும் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாவடை விஸ்வலிங்கம் (சின்னவன்) என்பவருக்கு எதிராக பிரதேச செயலாளர் மற்றும் குறித்த கிராம சேவையாளரால் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் இக் கிராம சேவையளரின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட கிராம சேவையாளர்களால் வவுனியா பிரதேச செயலகத்தில் இருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை நடைபவனியாக சென்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

DSC_0682 DSC_0683 DSC_0684 DSC_0685 DSC_0692 DSC_0694 DSC_0696 DSC_0698