வவுனியா மாணவியைக் கொன்றவர்கள் விரைவில் கைதுசெய்யப்பட வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன்!!

543

Selvam

வவுனியாவில் 13 வயது மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விரைவில் கைதுசெய்யப்பட வேண்டும் என, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த 16ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்டு ஒரு வருடங்கள் நிறைவடைவதற்குள் வடக்கில் இவ்வாறு மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆபத்தான நிலைமை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.