வவுனியாவில் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிகள் – வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சந்திப்பு!!

546

 
வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளால் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியா பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் பணிமனையில் நேற்று (02.03.2016) நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர்..

மக்கள் நலன்சார் திட்டங்களை திட்டமிடும்போது மாவட்டத்தின் நீண்டகால நோக்கை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டுமென தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினருமான டாக்டர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், மா.தியாகராசா, எம்.பி.நடராசா, ஜயதிலக மற்றும் தர்மபால செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உள்ளுராட்சி மன்றங்களினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்கள், எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இவ்வாறான கூட்டங்கள் எதிர்காலத்தில் மாதமொருமுறை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர், நகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை,வெங்கல செட்டிகுள பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைகளின் செயலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முன்னைநாள் பிரதேச சபைகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ACLG meeting 1 ACLG meeting 2 ACLG meeting 3