இலங்கையில் முதல் முறையாக நவீன புகைப்பட பிரதியிடல் இயந்திரம் வவுனியாவில் அறிமுகம்!!

1017

 
இலங்கையில் முதல் முறையாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புகைப்பட பிரதியிடல் (பிறிண்டிங்) இயந்திரம் இன்று ஒஸ்ரியா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.சிவஜீவன் அவர்களால் வவுனியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

வவுனியா அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் கோலகலமாக அறிமுகம் செய்யப்பட்ட இவ்வியந்திரத்தில் மரப்பலகை உட்பட, புகைப்பட அல்பங்கள் வரைக்கும் ஏழு வர்ணங்களில் பிரதியிட (பிறிண்ட்) செய்ய முடியும் என்பதுடன் இத்தொழில் நுட்பத்தில் பிரதியிடப்படும் புகைப்படங்கள் 200 வருடங்களுக்கு மேல் பாவிக்கக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எச்.பி நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் ஆர்.அப்பாதுரை கலந்துகொண்டிருந்தார்.

IMG_0464 IMG_0467 IMG_0473 IMG_0481 IMG_0496 IMG_0502