வவுனியாவில் இடம்பெற்ற செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்ச்சி இடை நிறுத்தம்!!

487

Gamini

வவுனியாவில் நேற்று காலை தெற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயற்பட்டு மகிழ்வோம் உடலியக்க விளையாட்டு செயற்பாட்டு நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னர் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று காலை 9 மணியளவில் வவுனியா காமினி மகாவித்தியால மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்கு வந்த பாடசாலை மாணவர்களை தரம் பிரித்து ஒழுங்கு படுத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் இரு மாணவர்களுக்கு மைதானத்திலிருந்த சாரயப் போத்தலின் துண்டு காலில் காயத்தினை எற்படுத்தியதையடுத்து செயற்பட்டு மகிழ்வோம் உடலியக்க செயற்பாட்டு நிகழ்வினை வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பிரதி நிதிகள் மாணவர்களின் நன்மை கருதியும் மைதானம் பொருத்தம் இன்மை, துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை, மைதானம் புனரமைப்பு செய்யப்படவில்லை, சாரயப்போத்தலின் துண்டுகள், பியர் ரின்கள் என்பன மைதானத்தில் காணப்பட்டதையடுத்தும் இரு மாணவர்களுக்கு உடைந்த சாரயப் போத்தலின் துண்டினால் காயம் ஏற்பட்டதையடுத்து இடம்பெற இருந்த நிகழ்வினை இடைநிறுத்திச் சென்றனர்.

தரம் 5 மாணவர்களை உள்ளடக்கிய உடலியக்க செயற்பாட்டு நிகழ்வில் ஒரு பாடசாலையிலிருந்து 10 மாணவர்கள் கலந்து கொண்டதுடன் 30 பாடசாலைகளிலிருந்து சுமார் 300 மாணவர்கள் பெற்றோருடன் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் சிங்கள மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வாக எற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இடை நிறுத்தப்பட்ட நிகழ்வினை இன்னுமொரு தினத்தில் நடாத்துவதாக அங்கு வந்த பிரதி நிதிகள் தெரிவித்தள்ளனர். காயமடைந்த இரு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.