வவுனியா மகளிர் தின நிகழ்வில் அறைகூவல்!!

527

 
வவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று(08.03.2016) காலை 9.30 மணியளவில் இனைஞர் சேவைகள் நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி வவுனியா மத்திய பேரூந்து நிலையம ஊடாக யாழ்வீதி வழியாக வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்து மாவட்ட செயலாளர் திரு. ரோகன புஸ்பகுமார அவர்களிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

நீதிக்கான பயணம், அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பு, வடமாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு, பெண்கள் செயற்பாட்டுக்கான வலையமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த பெண்கள் விழப்புணர்வு மகளிர் தின நிகழ்வில் கலந்த கொண்டவர்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதரான பாதாதைகளை ஏந்தியவாறு வாயை கறுப்புத் துணியினால் கட்டியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் எமது சமூகத்தில் நிகழ அனுமதிக்கமாட்டோம்.
பெண்களுக்கெதிரான வன்முறையாளராக எமது ஆண்களை மாற அனுமதிக்கமாட்டோம்
பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களாக நாங்கள் இருக்க மாட்டோம்
பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம்.

போன்ற கோசங்களை எழுப்பியவாறு சென்ற பேரணியினர் வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றபோது அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கான மகஜரினை கையளித்தனர்

மூன்று கோரிக்கைகள் அடங்கிய அம் மகஜரின் விபரம் வருமாறு,

1. பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைக்கான துரித நீதி வேண்டும்

2. பெண்கள், சிறு பிள்ளைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தேசிய பிரச்சினையாக அரசாங்கம் அறிவிக்கவேண்டும்

3. சட்டமாதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள இவ் வன்முறைகளுக்கெதிராக வழக்குகள் விசாரணைக்கு உடனடியாக வரும் வகையில் விசேட சட்டத்தரணிகள் குழு அமைக்கப்படவேண்டும்.

என்பதை தங்களிடம் எமது கோரிக்கையாக முன்வைக்கின்றோம். மேலும் இதற்கான பதிலினையும் தங்களிடமிருந்து மிக விரைவாக எதிர்பார்கின்றோம் என்றும் அம் மகஜரில் தெரிவித்துள்ளனர்.

girls (1) girls (2) girls (3) girls (4) girls (5) girls (6) girls (7) girls (8) girls (9) girls (10) girls (11) girls (12) girls (13) girls (14) girls (15)