முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசையை இடைநிறுத்த கோயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இந்த பலி பூசை எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவிருந்தது.
எனினும் பலி பூசைக்கு எதிரான வழக்கு ஒன்றின் விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளதால் பலிபூசையை இடைநிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆலய நிர்வாகிகள் புத்தளம் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசை 2011ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவால் இடம்பெறவில்லை.
2012ம் ஆண்டு புத்தரின் புனித தாது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதால் முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசை இடம்பெறவில்லை.
இந்நிலையில் இம்முறையும் பலி பூசை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.





