விமான நிலையம் தீ பற்றி எரிந்தபோது கொள்ளையடித்த பொலிஸார்..!

672

vavuniyaகென்யா தலைநகர் நைரோபியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வருகையாளர் பகுதியில் ஏற்பட்ட இந்த தீயை சுமார் 4 மணி நேரம் போராடிய தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தினர்.

தீயணைப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றிக் கொண்டிருந்த அதே வேளையில், விமான நிலைய ஊழியர்களும், பொலிசாரும் கடமையே கண்ணாக வேறொரு காரியத்தில் ஈடபட்டிருந்தனர்.

வெறிச்சோடி கிடந்த வருகையாளர் பகுதியில் இருந்த வெளிநாட்டு பயணிகளின் பெட்டிகளை திறந்து, அவற்றில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை சுருட்டிச் செல்வதில் இவர்கள் கண்ணும் கருத்தமாக இருந்த காட்சி சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியுள்ளது.

மேலும், அப்பகுதியில் இருந்த ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து உள்ளே இருந்த பணத்தை பொலிசார் அள்ளிச்சென்ற காட்சிகளும் பதிவாகியிருந்தது.

இந்த காட்சிகளை கண்ட விமான நிலைய உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சி.சி.டி.வி. பதிவுகளில் இடம் பெற்றிருந்த பொலிசார் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 7 பொலிசார் மீதும், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் டாக்சி டரைவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த பொலிசார் இன்று அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர்.