கடந்த 6 மாதங்களில் பொலிஸாருக்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே இதனை தெரிவித்துள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம், பொது மக்களின் முறைப்பாடுகளை கவனத்தில் கொள்ளாமை, மற்றும் பக்கச்சார்பாக செயற்படுகின்றமை குறித்து இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 200 முறைப்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சமூக வலைதளங்கள் ஊடாக வெளியிடப்படும் காணொளிகளை கொண்டு பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்ததாக உரிய ஆதாரங்களுடன் அவர்களுக்குகெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு அமைய 2015ம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






