இந்தோனேசியாவின் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

565

Earthquakeஇந்தோனேசியாவில் தனிம்பார் தீவில் உள்ள சாம்லேகியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இதனால் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.

கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.