தலைவா படத்தை ரிலீஸ் செய்தால் தலை இருக்காது : மிரட்டும் தமிழ் இளைஞர் மாணவர் படை!!

1384

Thalaivaa Movie Exclusive Posters

நடிகர் விஜயின் தலைவா திரைப்படத்தை திரையிட்டால் தலையை கொய்துவிடுவோம் என்று தமிழ் இளைஞர் மாணவர் படை என்ற அமைப்பு திரையரங்குகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

தலைவா படத்தில் அரசுக்கு எதிரான வசனங்கள் இருப்பதாகவும் விஜயின் தந்தை எஸ்.ஏ.சியின் சில பில்டப் பேச்சுகளும்தான் படம் வெளியாகாமல் போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழக இளைஞர் மாணவர் படை என்ற பெயரில் வேறு ஒரு காரணத்தை முன்வைத்து தலைவா படத்தை ரிலீஸ் செய்தால் தலை இருக்காது என்று மிரட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த அமைப்பு அனுப்பிய மிரட்டல் கடிதத்தில் தலைவா திரைப்படத்தை எஸ்.ஆர்.ஆம். கல்வி நிறுவனங்களின் தலைவர் புதிய தலைமுறை டிவி பச்சமுத்துவின் வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது.

மாணவர்களிடம் கொள்ளையடித்த பணத்தில் அவர் வாங்கி வெளியிடுவதால் அவரை எதிர்க்கும் வகையில் இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது. அப்படி ரிலீஸ் செய்தால் தலை கொய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்ததாம்.