
ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இடையே அமைந்த நதியில் உள்ள சர்ச்சைக்குரிய தீவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சீனாவின் ஹிலாங்ஜியாங் மாகாண எல்லையை ஒட்டி அமுர் நதி ஓடுகிறது.
இந்த நதியின் நடுவே அமைந்துள்ள ஹிஜியாசி என்ற தீவுக்கு கடந்த 2008ம் ஆண்டிலிருந்து சீனாவும் ரஷ்யாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. 335 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள இந்த தீவை இருநாடுகளும் ஆக்கிரமித்துள்ளன.
இந்நிலையில் சீனாவில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனையடுத்து அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அமுர் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் ஹிஜியாசி தீவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, மேலும் அங்கிருந்த நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.





