சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் சீன சுற்றலாப் பயணிகளின் வருகை 72 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
2012ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 9622 சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
2013ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் 16582 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுச் செல்வதாக சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிறுவனத்தின் துணைப் பணிப்பாளர் யுவராஜ் அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் சீனர்கள் பிரவேசித்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சீனர்கள் இலங்கையை ஆக்கிரமித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
குறிப்பாக நாட்டின் தொழிற்சந்தையில் சீனர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் உள்நாட்டுப் பிரஜைகள் மேலும் வேலையில்லாப் பிரச்சினையால் திண்டாட நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





