ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனியின் (புளொட்) 8 வது தேசிய மாநாடு சிறப்பாக வவுனியா, கோவில்குளம், ஆதி மண்டபத்தில் நேற்று (22.05) நடைபெற்றது.
முன்னதாக உமாமகேஸ்வரன் இல்லத்தில் மறைந்த புளொட் அமைப்பின் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அங்கிருந்து கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பேராளர்கள் ஊர்வலமாக வந்து உமாமகேஸ்வரன் சந்தியில் அமைந்துள்ள ஆதி மண்டபத்தில் மாநாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதில் புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், க.சிவனேசன், ஜி.ரி.லிங்கநாதன், 14 நாடுகளில் இருந்து வந்த புளொட் அமைப்பின் உறுப்பினர்கள், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதா க.சந்திரகுலசிங்கம், கட்சித் தோழர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டதுடன் கட்சியின் பிரகடனமும் வெளியிடப்பட்டு கருத்துரைகளும் இடம்பெற்றிருந்தன.












