வெலிக்கடை சிறையிலிருந்து நான்கு சிறைக்கைதிகள் தமிழகத்திற்கு மாற்றம்..!

802

velikadaஇலங்கையின் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தமிழக கைதிகள் தமிழகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக பொலிஸாரின் பாதுகாப்புடன் இரண்டு பெண் கைதிகள் உட்பட்ட நான்கு பேரும் நேற்று ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தி;ல் அழைத்து செல்லப்பட்டு பின்னர் திருச்சியின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையிலான சிறைக்கைதிகள் மாற்று உடன்படிக்கையின்கீழ் இவர்கள் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

போதைவஸ்து உட்பட்ட குற்றங்களுக்காக கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களில் இருவர்; தமது தண்டனைக்காலமான சுமார் 10 வருடங்களில் பாதிகாலத்தையும் சிலர் பெருமளவு காலத்தையும் கழித்துள்ளனர்.

இந்தநிலையில் மீதமுள்ள தண்டனைக் காலம் முடியும் வரை இவர்கள் தமிழக சிறைகளில் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.