சென்ற மாதம் 22ம் திகதி இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் எனப் பெயர் வைத்தார்கள். பிரபலங்களை வைத்து காசு பார்க்கும் வியாபார புலிகள், ‘குட்டி இளவரசர்´ பிறந்த உடனேயே ஆண் குழந்தைகளுக்கு என ஒரு மொடல் உடையையும், பெண் குழந்தைகளுக்கு ஒரு மொடல் உடையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில், முறையே ´ஜோர்ஜ் தான் பின்னாளில் மிகச் சிறந்த மன்னர்´ எனவும், ‘ஒருநாள் நிச்சயமாக நான் தான் இளவரசர் ஜோர்ஜை கல்யாணாம் செய்து கொள்ளப் போகிறேன்´ எனவும் அச்சிடப்பட்டுள்ளது.
ஜேரோவில் உள்ள 28 வயது இளம் தாயான அமி பிராடி , தனது 9 வார பெண் குழந்தையான சியன்னாவுக்கு இந்த அழகிய உடையை அணிவித்து புகைப்படம் எடுத்துள்ளார்.
அதில் சியன்னா ‘ ஒருநாள் நான் நிச்சயமாக இளவரசர் ஜோர்ஜை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்´ என தெரிவிப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு விடாமல், அந்த க்யூட் போட்டோவை பேஸ்புக்கில் ஏற்றி விட்டார் அமி. குறிப்பாக அது இளவரசர் ஹரியின் ரசிகர் பக்கத்தில் ஏற்றப்பட்டவுடன் பரபரப்பு பற்றிக் கொண்டது.
குட்டி இளவரசியின் புகைப்படத்திற்கு தேங்க்ஸ் என கமெண்ட்கள் வரத் தொடங்கிவிட்டதாம்.
முதல் பார்வையில் தவறுதலாக இக்குழந்தைதான் ஜோர்ஜ் என தவறாக புரிந்து கொண்டார்களாம் மக்கள். ஆக மொத்தத்தில் 2 இலட்சம் லைக்குகளைத் தட்டி வாழ்த்தி விட்டார்கள் சியன்னாவை.
இது குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ள செய்னாவின் தாயார், இது தான் எதிர்பார்க்காத ஒன்று எனவும், 2லட்சம் லைக்குகளைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
5000 ஆயிரம் கமெண்ட்கள் வந்துள்ளதாம் செய்னாவின் புகைப்படத்திற்கு சிலவற்றில் ‘மூக்கு அப்படியே கேட் மாதிரியிருக்கிறது´ எனக் கூறி கிச்சு கிச்சு மூட்டியிருக்கிறார்களாம்.
இணையத்தில் ‘வைரஸ்´ போல் பரவி விட்டது செய்னாவின் புகழ். செய்னாவைத் தொடர்ந்து இப்போது நிறைய குட்டிப்பாப்பாக்கள் குட்டி இளவரசருக்காக வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டார்களாம். பார்ப்போம், இவர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று.
ராஜவம்சத்தினர் எப்பவுமே ட்ரெண்ட் செட்டர்கள் தான். ஜோர்ஜ் பிறந்த மறுதினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கேட் மற்றும் ஜார்ஜ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாயின.
அவ்வளவுதான், குட்டி ஜோர்ஜ் மற்றும் கேட் உடைகளுக்கு மவுசு கூடிவிட்டது. கேட் போட்டு இருந்த நீல நிற சட்டையும் ,குட்டிக்கு போர்த்தி கொண்டு வந்த வெள்ளை மஸ்லின் துணியும் உலக மக்களின் விருப்பமாகி விட்டது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அந்த வெள்ளி மஸ்லின் துணி போட்டோ வெளியான 4 மணிநேரத்தில் படுபிரபலமாகி விட்டது.
அந்த துணி தயாரித்த கம்பெனியின் வெப்சைட் திண்டாடி விட்டதாம். தொடர்ந்து மக்கள் அந்த வெப்சைட்டில் ஓடர் கொடுத்த வண்ணம் இருக்கின்றனராம்.
இதுவரை கிட்டத்தட்ட 7000 பேருக்கும் அதிகமானோர் அதே வகை துணியினை ஓடர் கொடுத்தார்களாம். ஆனால் கேட் அணிந்திருந்த இந்த உடை அவருக்காக மட்டும் தயாரானது என்று ஓடர் எதுவும் அந்த கம்பெனி எடுத்து கொள்ளவில்லை.





