மீண்டும் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கிறது : மககள் அவதானம்!!

1127

River

பல ஆறுகளில் மீண்டும் நீர் அதிகரித்துச் செல்வதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.

நேற்று மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

இதன் காரணமாக ஆற்றோரங்கள் மற்றும் மலையகப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில் இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யலாம் என்று எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.