இரண்டு காதலர்களைப் பிரிந்த சிநேகா!

480

snehaaaஅமலா பாலைப் போல சினேகாவும் இரண்டு காதலர்களைப் பிரிந்துவிட்டாரா எனப் பதற வேண்டாம். இது சிநேகாவின் காதலர்கள் படம் பற்றிய செய்தி.

அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அத்வைதாவைத் (இப்போது கீர்த்தி என பெயரை மாற்றிவிட்டாராம்) தவிர புதுமுகங்கள் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கிறது சிநேகாவின் காதலர்கள்.

முதல்கட்ட படப்பிடிப்பை 25 நாட்களுக்கு கோவை மற்றும் கொடக்கானலில் முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இதில், திலக், உதய் என்ற இருவரைக் காதலித்து, கண்ணீருடன் பிரிந்திருக்கிறார் சிநேகா.

அடுத்த ஷெட்யூல் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. சென்னை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள்.

இந்த ஷெட்யூலிலும் பலரைக் காதலித்துக் கசிந்துருகி பிரியப் போகிறாராம் சிநேகா. ஆனால் காதலர்களின் எண்ணிக்கையை மட்டும் படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் இயக்குநர்.

விரல் விட்டு எண்ண முடியுமா? இல்லை கல்குலேட்டர் வேண்டுமா என்பது சிநேகாவுக்கே வெளிச்சம்.