
தமிழ்நாட்டில் பட்டதாரி ஒருவர் படித்த பாடம் மறந்து போனதால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை மீமிசல் கிராமத்தில் உணவு விடுதி நடத்தி வந்த ஒருவரின் பேரன் பாஷா. இவர் பி.எட் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்.
18ம் திகதி நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிலையத்தில் அறை எடுத்து தங்கி இருந்து படித்து வருகிறார். துறை சம்மந்தமாக எந்த கேள்விகள் கேட்டாலும் உடனுக்குடன் பதில் சொல்லும் திறமையுடன் படித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் அறை நண்பர்களிடம் பேசும் போது படித்தது எல்லாம் மறந்துகிட்டே இருக்கு. நான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வது போல எண்ணம் வருகிறது. என்னை நானே அழித்துக் கொள்வேனோ என்று பயமாக உள்ளது என்று பேசியுள்ளார்.
இதனைக் கேட்ட அறை நண்பர்கள் பாஷா வீட்டிற்கு தகவல் சொல்லி அவரை மீமிசலுக்கு அனுப்பிவிட்டனர்.
இந்நிலையில் பேருந்து நிறுத்தம் அருகில் சோர்வாக நின்றவரிடம் அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன பிரச்சனை ஏன் இப்படி இருக்கிறார் என்று கேட்ட போது படித்தது எல்லாம் மறந்து விட்டது. அதனால் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று சொல்லியுள்ளார்.
சாதாரணமாக சொல்கிறார் என்று அவர்களும் பேசாமல் இருந்துவிட்டனர். ஆனால் பாஷா சொன்னது போலவே தற்கொலை செய்து கொளவதற்காக தன் கழுத்தை தன்னை தானே அறுத்துக் கொண்டு கதறியுள்ளார்.
இதனைப் பார்த்த பெற்றோர்கள் அவரை திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அதிகம் படித்து மறந்து போனதால் கழுத்தை அறுத்துக் கொண்ட பட்டதாரி ஆசிரியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





