வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கு தொலைபேசி மூலம் 12 இலட்சம் ரூபா கப்பம் கோரிய சந்தேநபரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
கடந்த 20.05.2016ம் திகதி வடமாகாண சுகாதார அமைச்சரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து மரண அச்சுறுத்தல் விடுத்ததுடன் 12 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இம் முறைப்பாட்டினை விசாரணை செய்த பொலிசார் இன்று வவுனியா புதுக்குளத்தை சேர்ந்த மாடசாமி சுதாகரன் என்பவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






