சார்க் ஒப்பந்தத்தின்படி, இலங்கை அரசு ஆயுள் தண்டனை கைதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க தொடங்கி உள்ளது.
முதல் கட்டமாக ஒரு பெண் உள்பட 4 கைதிகளை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
அடுத்ததாக நேற்று 5 கைதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை நாட்டின் நீதித்துறையால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் மீதி தண்டனை காலத்தை இந்திய சிறையில் கழிக்கவுள்ளனர்.
இலங்கையில் தண்டனை அனுபவித்து வந்த இதேபோல 20 கைதிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசம் ஒப்படைக்கப்பட்டார்கள்.





