கச்சத்தீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாகவும் தேவர் தேசியப் பேரவையினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து பேரவையின் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் அரசரடியில் உள்ள மூக்கையாத் தேவர் சிலை முன்பு வியாழக்கிழமை கூடினர்.
சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள் கச்சத்தீவுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டனர்.
தகவலறிந்த பொலிஸார் அங்கு விரைந்து வந்து கே.சி.திருமாறன் உள்ளிட்ட 69 பேரையும் கைது செய்தனர்.
அவர்களை திருமண மண்டபத்தில் தங்கவைத்த பின்னர் மாலையில் விடுவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.





