ஒரு வயதும் இரண்டு மாதங்களும் மட்டுமேயான பெண் குழந்தை வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (17) முற்பகல் வெலிமடை வைத்தியசாலை அதிகாரியினால் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தையின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
குழந்தையின் தாயார் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் குறித்த தாயாருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபர் காணாமற்போயுள்ளதாகவும் குழந்தையின் மரணம் தொடர்பில் அந்நபருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.