காதலனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னை கத்தியால் குத்தி கொன்ற காதலி..!

474

knifeசிட்னியில் முன்னாள் காதலருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பலமுறை கத்தியால் குத்தி கொன்ற குற்றத்திற்காக இந்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிட்னி நகரில், 30 வயது இந்திய பெண்ணான மனிஷா பட்டேல் வசித்து வந்தார். இவரும் ஒரு இளைஞரும் காதலித்து வந்தனர்.

நாளடைவில் இந்த காதல் கசந்துவிடவே, சிட்னியின் பெஸ்டிக் பகுதியில் வசிக்கும் இந்திய பெண்ணான புர்வி ஜோஷியை இந்த இளைஞருக்கு திருமணம் செய்ய நிச்சயித்தனர்.

இந்த செய்தியை அறிந்த மனிஷா பட்டேல் கடந்த மாதம் 30ம் திகதி புர்வி ஜோஷியின் வீட்டிற்கு சென்று அவரை பலமுறை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜோஷி, இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு தொடர்பு செய்த பொலிசார் மனிஷா பட்டேலை விசாரித்து வந்தனர்.

விசாரணையில் மனிஷாதான் ஜோஷியை கொலை செய்தார் என்பது உறுதி செய்யப்பட்டதால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்க நீதிபதி மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.