மீண்டும் கமலுக்கு ஜோடியாக அசின்..!

445

asinகமல்ஹாசனுக்கு ஜோடியாக மீண்டும் அசின் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தசாவதாரம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தவர் அசின்.

இந்நிலையில் தற்போது லிங்குசாமி தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகும் படம் உத்தம வில்லன்.

கிரேஸி மோகன் திரைக்கதை, வசனங்கள் எழுத, இப்படத்தில் கமல் நடிக்கிறார்.

அக்டோபரில் தொடங்கும் இப்படத்திற்காக காஜல் அகர்வாலிடம் முதலில் கேட்கப்பட்டது.

ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவர் ஒதுங்கி விட்டதால், அசினிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது விஸ்வரூபம்-2 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள கமல், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

இதன் பின் உத்தம வில்லன் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.