வவுனியாவில் ‘முதலீட்டாளர்கள் தினம் 2013’..!!

604

vavuniyaகொழும்பு பங்குச்சந்தை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கொழும்பு பங்குச்சந்தை பிரதிநிதிகளுடன் தொடர்பை ஏற்படுத்துதல், பங்குத்தரகர் நிறுவனங்கள் மற்றும் அலகுப்பொறுப்பாட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்தல் தொடர்பான விபரங்களை பொது மக்களுக்கு வழங்கும் வகையில் முதலீட்டாளர்கள் தினம் 2013 நிகழ்வு வவுனியா நகரில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

வவுனியாவின் றோயல் கார்டின் ஹோட்டலில் ஓகஸ்ட் 31ஆம் திகதி காலை 10.30 மணி முதல் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் அறிவுபூர்வமான முதலீட்டுத் திட்டங்களை தெரிவு செய்வது தொடர்பான விபரங்கள் தமிழ் மொழியில் பங்குபற்றுநர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவுள்ளன.

பிணையங்கள் பரிவர்த்தனையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த முதலீட்டாளர்கள் தின நிகழ்வில், சட்ட ரீதியான முதலீடுகள் பற்றி அறிந்து எம்மை நாமே வளப்படுத்த அனைவரும் வருமாறு கொழும்பு பங்குச்சந்தையின் அதிகாரிகள் அழைப்புவிடுத்துள்ளனர்.