சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள லிங்ஷு நகரை சேர்ந்தவர் குயோ ஷென்ஸி. பொலீஸ்காரராக பணிபுரிகிறார். சம்பவத்தன்று இவர் கரோகி பகுதியில் உள்ள பாரில் தனது நண்பர்களுடன் மது குடித்தார்.
குடிபோதையில் தள்ளாடியபடி நண்பர்களுடன் ரோட்டில் நடந்து வந்தார். அப்போது ஒருவர் தனது 7 மாத பெண் குழந்தை யூயூவை தூக்கி கொண்டு மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் தனது நண்பர்களிடம் அந்த நபர் கையில் ஒரு பொம்மையை எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் அவரது நண்பர்கள் குழந்தைதான் என அடித்து சொன்னார்கள்.
அதை பொய் என வாதிட்ட பொலீஸ்காரர் ஷென்ஸி அந்த நபரை நோக்கி வேகமாக சென்றார்.
பின்னர், அவரின் கையில் இருந்த குழந்தையை பிடுங்கி தரையில் வீசி அடித்தார். அதில், குழந்தையின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் உயிருக்கு போராடிய குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து பொலீஸ்காரர் ஷென்ஸி கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதமும் இதுபோன்ற சம்பவம் நடந்தது. தாயுடன் சென்ற 2 வயது சிறுமியை ஒரு நபர் தூக்கி தரையில் அடித்து காயப்படுத்தினார். சிகிச்சை பலனின்றி இறந்தது.





