கொலை வழக்கில் சாட்சியமளிக்கும் கிளி!!

398

parrot

அமெரிக்காவில் நடைபெறும் கொலை வழக்கு ஒன்றில் கிளி சாட்சியான வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் மிசிகனை சேர்ந்தவர் மார்டின், இவரது மனைவி கிளன்னா துராம் (48). இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் கிளன்னா துராம் தனது கணவர் மார்டினை 5 தடவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். அதன் பின்னர் அவர் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் துப்பாக்கி வெடிக்காததால் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது. இக்கொலையை நேரில் பார்த்த சாட்சி யாரும் இல்லை. இதற்கிடையே இத்தம்பதி ஆபிரிக்காவை சேர்ந்த கிளி ஒன்றை செல்லமாக வளர்த்தனர். அதற்கு பட் என பெயிரிட்டுள்ளனர்.

இது மிகவும் தெளிவாக பேசும் திறன் படைத்தது. மேலும் நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து அதை திரும்ப தெரிவித்து வந்தது.

தற்போது இக்கொலை வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. அதில் இந்த கிளியை சாட்சி ஆக சேர்க்க வேண்டும் என அரசு தரப்பு வக்கீல் ராபர்ட் ஸ்பிரிங்ஸ் டெட் கேட்டுக்கொண்டார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிளி சாட்சி சொல்ல அனுமதித்துள்ளார். அறிவு திறன் படைத்த இக்கிளி தற்போது மார்டினின் முன்னாள் மனைவி கிறிஸ்டினா கெல்லரிடம் உள்ளது.

கொலை நடந்த அன்று இறுதியாக கிளன்னா துராமிடம் மார்டின் என்னை சுடாதே (‘டோன்ட் ஷூட்’) என கூறிய வார்த்தையை கிளி திரும்ப திரும்ப தெரிவிக்கிறது. எனவே நீதிமன்றில் இக்கிளி அளிக்கும் சாட்சியத்தின் மூலம் கிளன்னாவுக்கு தண்டனை வழங்க முடியும்.