ஏ.ஆர்.முருகதாஸ், ஃபோக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கும் ராஜா ராணி படத்தின் விளம்பர ஸ்டண்டுகள் நயன்தாரா, ஆர்யா திருமணம் பற்றியதாகவே தொடர்ந்து இருக்கிறது.
ஆர்யாவும் நயன்தாராவும் காதலிக்கிறார்கள் என்ற ஒரு கிசுகிசு சமாச்சாரத்தை எடுத்துக் கொண்டு இந்த விளம்பரங்களை வடிவமைத்து வருகிறார் படத்தின் இயக்குனர் அட்லீ.
கடந்த சில சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் ஆர்யா, நயன்தாரா மேடையில் திருமணம் செய்யப்போகிறார்கள் என்று விளம்பரம் செய்து அதையே படத்தின் புரமோஷனாக்கினார்கள்.
பிறகு மேடையில் இருவரையும் அழைத்து ராஜாராணி படத்தில் இருவரும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்று ரசிகர்களுக்கு ஆளுக்கொரு பல்பு கொடுத்தார்கள்.
படத்தின் ஆடியோ வருகிற 23ந் திகதி நடக்க இருக்கிறது. அதற்காக இன்று பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஆர்யாவும், நயன்தாராவும் திருமண கோலத்தில் வருவது போன்ற படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ மணப்பெண் போல அவர் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த விளம்பரம் எல்லா விளம்பரத்தையும்போல சாதாரணமாகத்தான் கவனிக்கப்பட்டிருக்கும். இது தொடர்பாக இயக்குனர் அட்லி மீடியாக்களுக்கு அனுப்பி உள்ள மெயிலில் இதற்கான விளக்கத்தை கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார்.
அதில் “வேண்டுமென்றேதான் இந்த படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்பு செய்தது திருமண பத்திரிக்கை என்றால் இது திருமண ஆல்பம்” என்று கூறியிருக்கிறார். போகிற போக்கை பார்த்தால் ஆடியோ வெளியீட்டில் நிஜ திருமணத்தை நடத்தி விடுவார்கள் போலிருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் ஆடியோ வெளியீட்டு விழாவில் நயன்தாரா, ஆர்யாவுடனான காதலை உறுதி செய்யப்போகிறார். அல்லது பகிரங்கமாக மறுக்கப் போகிறார் என்பது மட்டும் உறுதி.





