கிறிஸ்மஸ்தீவு அருகே மற்றொரு படகு மூழ்கியது: 106 பேர் உயிருடன் மீட்பு..!

595

christmasஅவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத மாகப் பயணித்த மற்றுமொரு படகு நேற்றுக் கடலில் மூழ்கியுள்ளது. இப் படகிலிருந்து 106 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து 120 கிலோ மீற்றர் கடல் மைல் தொலைவிலேயே இப்படகு மூழ்கியிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகொன்று மூழ்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சுங்கப் பிரிவினரின் விமானங்களும், அவுஸ்திரேலிய கடற்படையினரின் கப்பலொன்றும் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

படகில் பயணித்தவர்களில் இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், படகிலிருந்தவர்களை மீட்பதற்கு 8 ஹெலிகொப்டர்களும், கடற்படையினரின் இரண்டு படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்பு அதிகாரசபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவிலிருந்து பயணித்த படகொன்றே இவ்வாறு மூழ்கியிலிருக்கலாமென ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு இவ்வருடத்தில் மாத்திரம் 13,000ற்கும் அதிகமானவர்கள் சட்டவிரோதமாகப் படகுகளில் வந்திருப்பதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.