மனிதர்களின் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டங்களை தடுப்பது தொடர்பான கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற செயற்பாடுகளை வலுப்படுத்துவம் வகையிலான ஜகார்த்தா கோட்பாட்டை இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இடம்பெறும் இது தொடர்பான மாநாட்டில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் இலங்கை சார்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துக் கொண்டிருந்தார்.
இதன் போது சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுகின்றவர்களை உடனடியாக கைது செய்யவும், அவர்களை நீதிமன்றத்தின் முன்லைப்படுத்தும் முன்னர் தடுத்து வைக்கவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலு செய்யும் வகையிலான உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
இதில் இலங்கை, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட 14 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.
இதேபோன்று இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகள் ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்படாமை தொடர்பான பிராந்திய உடன்படிக்கை ஒன்றும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.