சர்வதேச போட்டிகளிலிருந்து முன்னணி காற்பந்து வீரர் க்லோஸ் ஓய்வு..!

451

footballஜெர்மனியின் முன்னணி கால்பந்து வீரராக விளங்குபவர் மிரோஸ்லாவ் க்லோஸ்.

இவர் வரும் 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடக்க இருக்கும் உலககோப்பை கால்பந்து போட்டிக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தேசியப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் இதே முடிவு எடுக்கப்படலாம் என்றும் அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். லாசியோ அணியின் நட்சத்திர வீரரான க்லோஸ் (வயது 35), ஜெர்மனிக்காக 128 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இதுவரை அவர் அடித்துள்ள கோல்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆகும். இன்னும் ஒரு கோல் அடித்தால் அவர் சக நாட்டவரான மியுல்லரின் சாதனையை சமன் செய்ய முடியும்.

மேலும், இந்த 67 கோல்களில் 14 உலகக் கோப்பை (3) போட்டிகளில் அடித்ததாகும். வரும் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் இன்னும் ஒரு கோல் அடித்தால், பிரேசில் வீரர் ரொனால்டோவின் சாதனையான 15 என்ற எண்ணிக்கையை சமன் செய்வார்.

இந்த இரண்டு சாதனைகளை சமன் செய்வதுடன் மிரோஸ்லாவ் ஒய்வு பெறக்கூடும் என்றபோதிலும், ஜெர்மனிக்காக கோப்பையை வெல்வதே தனது லட்சியம் என்று அவர் தெரிவித்தார்.

லாசியோ அணியுடனான ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவதால், பண்டஸ்லிகா அணியுடனான தனது ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் எண்ணத்திலும் மிரோஸ்லாவ் உள்ளார்.