ருவன்வெல்ல – வெத்தாகல பிரதேசத்தில் இரு சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
16 வயதுடைய சிறுவனும் 14 வயதுடைய சிறுமியும் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காதல் பிரச்சினையால் ஏற்பட்ட மனக்கவலையில் குறித்த சிறுவன் சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.
அதனைக் கண்டு மனமுடைந்த சிறுமி வீட்டு அறைக்குள் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.