கமலுடன் மோதும் அஜித்..!

948

kamalதீபாவளிக்கு அஜித்தின் ஆரம்பமும், கமலின் விஸ்வரூபமும் மோதுவதற்கு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்து வந்த படத்திற்கு எப்படா தலைப்பு வைப்பார்கள் என்று ரசிகர்கள் பல மாதம் காத்திருந்த படம் ஆரம்பம்.

அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள படம் ஆரம்பம்.

இப்படத்தில் அஜித் ஹேக்கராக வருகிறார் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால் ஆர்யா தான் ஹேக்கராம். ஆரம்பம் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்நிலையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தையும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

எனவே தீபாவளிக்கு அஜித், கமல் படங்கள் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.